Pages

மைதா-வெனிலா கேக்

செய்யத் தேவையான பொருட்கள்:

மைதா                                               ~~  150 கிராம்
சர்க்கரை                                          ~~   200 கிராம்
நெய்                                                   ~~   100 கிராம்
வெனிலா எசென்ஸ்                   ~~   2 சொட்டு


செய்முறை :
           பாத்திரத்தில் நெய்விட்டு சூடான் பின் மைதா சேர்த்து பச்சை வாசனை போக வறுத்துக் கொள்ளவும். சர்க்கரையை சிறிதளவு நீர் சேர்த்து முத்து பதம் வரும் வரை கொதிக்க விடவும்(பாகு கொதிக்கும் போது முத்தாக நுரை வரும்) . பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, வறுத்த மைதாவை, சர்க்கரைப் பாகில் சேர்த்து நன்கு வேகமாக கிளறவும். மைதா, சர்க்கரை கலவை இறுகும் போது, வெனிலா எசன்ஸ் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது ஆறியபின் வில்லைகள் போடவும்.


No comments:

Post a Comment