செய்யத் தேவையான பொருட்கள்:
சோள மாவு ~~ 100 கிராம்சர்க்கரை ~~ 150 கிராம்
நெய் ~~ 100 கிராம்
முந்திரி ~~ சிறிதளவு
உலர் திராட்சை ~~ சிறிதளவு
வெள்ளரி விதை ~~ சிறிதளவு
கேசரி பவுடர் ~~ சிறிதளவு
ஏலக்காய்த் தூள் ~~ ஒரு சிட்டிகை
செய்முறை :
முந்திரியை கடாயில் சிறிது நெய் விட்டு வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும். சோள மாவில் கேசரி பவுடர் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு முத்து பதம் வரும் வரை கொதிக்க விடவும்(பாகு கொதிக்கும் போது முத்தாக நுரை வரும்) . பின்னர் கொதிக்கின்ற சர்க்கரைப் பாகில், கரைத்த சோள மாவு மற்றும் நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கலவை வெந்து, நெய் பிரிந்து வரும் போது ஏலக்காய்த்தூள் வறுத்த முந்திரி, உலர் திராட்சை, வெள்ளரி வித சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும். சிறிது ஆறியபின் வில்லைகள் போடவும்.
No comments:
Post a Comment