முந்திரி பர்பி

 செய்யத் தேவையான பொருட்கள்:

    முந்திரி                                  ~~ 250 கிராம்
    சர்க்கரைத் தூள்                 ~~ 200 கிராம்
    நெய்  (அ) வெண்ணெய்  ~~ ஒரு டேபிள்ஸ்பூன்
    பால்                                        ~~  கால் கப்
    ஏலக்காய்த் தூள்               ~~  ஒரு சிட்டிகை

செய்முறை :
         முந்திரியை கழுவி சுத்தம் செய்து பாலில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாலை வடிகட்டி ஊறிய முந்திரியை தூளாக அரைக்கவும். வடிகட்டிய பால், சர்க்கரைத்தூள் மற்றும் ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை அரைத்த முந்திரிக் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும். அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும், அதில் கலந்து வைத்திருக்கும் கலவையைக் கொட்டி மிதமான தீயில் 10 நிமிடங்கள் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். பிறகு நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும். ஆறிய பின் வில்லைகள் போடவும். 

குறிப்பு:
        *    வில்லைகளை டைமண்ட் அளவில் போட்டால் அழகாக இருக்கும்.
        *    இதனை 10-15 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment