செய்யத் தேவையான பொருட்கள்:
கடலை மாவு ~~ 1 கப் தேங்காய்த் துருவல் ~~ 1 கப்
சர்க்கரைத் தூள் ~~ 4 கப்
தூளாக்கப்பட்ட முந்திரி ~~ தேவைக்கேற்ப
சர்க்கரைத் தூள் ~~ 4 கப்
தூளாக்கப்பட்ட முந்திரி ~~ தேவைக்கேற்ப
நெய் ~~ தேவைக்கேற்ப
பால் ~~ 1 கப்
ஏலக்காய்த் தூள் ~~ ஒரு டீஸ்பூன்
செய்முறை :
அகலமான பாத்திரத்தில் கடலை மாவை வாசம் வரும் வரை வறுத்தெடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். வேறொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் மாவைப் போட்டு கொஞ்ச நேரம் வறுத்தபின், பாலை சேர்த்து கிளறவும். நன்கு கெட்டியாக வரும் வரை கிளறிக்கொண்டே சர்க்கரையை சேர்க்கவும். பிறகு தூளாக்கப்பட்ட முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். நெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை நிறுத்தி விட்டால், அல்வா பதத்தில் இருக்கும். அதிகமாக சூடேற்றினால் கடினமாகி விடும். எனவே நடுத்தரமான பதத்தில் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும். ஆறியபின், துன்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment