செய்யத் தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு ~~ 2 கப்
சர்க்கரை ~~ 2 கப்
நெய் அல்லது வனஸ்பதி ~~ 1/2 கப்
பொடித்த ஏலக்காய் ~~ 1/2 டீஸ்பூன்
செய்முறை :
பாத்திரத்தில் சில துளிகள் நெய்விட்டு பாசிப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்தபின் தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவைத்து கொள்ளவும். பருப்பு குழையும்முன் அரை கப் சர்க்கரையைக் கொட்டி நன்றாகக் கிளறவும். சர்க்கரை பருப்புடன் சேர்ந்து சுருள வரும் வரை கிளறி ஏலக்காய் சேர்த்து நெய், வறுத்த முந்திரி சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
குறிப்பு:
அல்வா கெட்டியாக வருவதற்கு சர்க்கரை சேர்க்காத கோவா அரை கப் சேர்க்கலாம். முந்திரிப்பருப்புப் போடுவதற்கு முன் சேர்த்துக் கிளற வேண்டும்.
பாசிப்பருப்பு அல்வா தயார் ! ! !
No comments:
Post a Comment